Nature கவிதைகள்
தென்றல் காற்றும்
தென்னை இலை கீற்றும்
குன்றும் மலையும்
குறுகிய இலையும் !
செவ்வாய் இதழும் செந்தாமரை மலரும் அடர்ந்த காடும்
அடங்காது கடல் அலையும் சுற்றும் புல்லினங்கால் சுற்றாத வனத் தினங்கள் குயில் இனங்கள் !
ஆடும் மயில் இனங்கள் வளைந்து ஓடும் ஆறுகள் வற்றாத நதிகள் அடர்ந்த காடுகள் அதில் படர்ந்த கொடிகள் உயர்ந்த மரங்கள் !
தரையோடு இணைந்த கரங்கள்
தூவும் மழை தூரல் மற்றும் சாரல் அதில் கரையும் செம்மண் சாயல் மணக்கும் மண் வாசம் காற்றில் பரவும் !
பூ வாசம் பல வண்ண பூக்கள் ஆர்ப்பரிக்கும் அலைகள்
சொட்டும் மழைநீர்
கொட்டும் அருவிகள் !
காற்றில் ஆடும் மரங்கள்
உயர்ந்த மலைகள்
தேன் சொட்டும் பூவிதழ்கள்
திசை எட்டில் இருந்தும் வரும் வண்டினங்கள்
பல வண்ண பட்டாம் பூச்சிகள்
பசுமை நிறைந்த இயற்கை
காட்சிகள் உரசி போகும் கடல் அலைகள் அதில் கரைந்து
போகும் மண் தரைகள் மீது
படர்ந்த பனித்துளிகள் அதில்
கரைந்து போகும் உயிர் துளிகள் !
உடலை சுட்டெரிக்கும் சூரியன் கவலைகளை சுட்டெரிக்கும் நிலவு இம்மை குளிர்ந்து போகும்
நிலவொளி அதில் மனம் கலைந்து போகும் பல வழி !
வான் எங்கும் சிதறிய
நட்சத்திரங்கள் புவி எங்கும்
சிதறிய இயற்கை வளங்கள் எத்துணை எத்துணை அழகு
உன்னில் எத்துணை எத்துணை மகிழ்ச்சி எண்ணில் !
வர்ணிக்க வார்த்தை இல்லை என் வண்ண கோல பூவுலகில் ரசித்திட எல்லை இல்லை இயற்கை அன்னையே !
மனிதனே உன்னால் கூடுமோ இறைவன் தந்த இனியும் நம்மால் வாழுமோ பூக்களின் நறுமணம் புதுமையானது பறவைகளின் இனிமையானது மழையின் மௌனம் அர்த்தமானது மரத்தின் தென்றல் மென்மையானது அமைதி !
அதிசயமானது அருவியின் அழகு ஆச்சரியமானது இருளில் பயம் விசித்திரமானது தூரம் விசாலமானது அன்பின் உறவு ஆழமானது இவை அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கை புதிரானது மட்டுமல்ல புனிதமானதும் கூட !
கார்மேகம் தான் குளிர்ந்து மழை அருவி கொட்டுது விழும் துளிகள் தெறித்து விழும் துமி களாகிவாழ்வில் குறுமை காண்போம் வா குளிர் மனமாய் வரும் தென்றல் சுகமாக வீசுகையில்!
0 Comments