Trending

6/recent/ticker-posts

வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil

 வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil

வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil


தளர்ந்தும் நிற்காதே
 சோர்ந்தும் நிற்காதே 
வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது 
ஒரு நிகழ்ச்சி மட்டும்தான் 
முயன்றால் எட்டும்
 உன் உயரம் தான் வெற்றி....!!


நண்பா எந்த அளவுக்கு 
உயரம் செல்ல வேண்டும் 
என்று நினைக்கிறாயோ
 அந்த அளவுக்கு 
கடுமையான உழைப்பு வேண்டும் சோதனைகளை கடந்து செல்ல உன்னை தயார் படுத்திக்கொள் 
உன் வெற்றியைதடுக்க யாரும் இல்லை இங்கு...!!!


சோதனைகள் இல்லாமல்
 சாதனைகள் இல்லை தோழா
 தோழா சோதனைகளை கடந்தவன் மட்டும்தான் சாதனைகளை வென்றுள்ளான்....!


தடைகளையும் எதிரிகளையும் துணிவுடன் எதிர் கொண்டு முன்னேறும் போது
வெற்றிகள் மலராகவும் மாலையாகவும்
மகுடமாகவும் வந்து சேரும....!


சாதிக்கும் எண்ணம் 
ஆள்  மனதில் தோன்றிவிட்டால்
எது இருந்தாலும் 
இல்லை என்றாலும் 
சாதிக்க முடியும் 
உன் விடாமுயற்சியால் மட்டுமே....1


உனக்கான அடையாளத்தை
இந்த உலகம் உணரும் வரை 
உன்னை சுற்றி வரும்
ஒவ்வொரு விமர்சனங்களும்
உனக்கு எதிராகத்தான் இருக்கும் அதை எண்ணி வருந்தினாள்
வருந்திக் கொண்டே தான்
 இருக்க வேண்டும் 
அதனால் 
விமர்சனங்களை ஏறி மிதித்து 
அதன் மேல் நிமிர்ந்து நில் 
காலம் மாறும் 
முயற்சி கைகொடுக்கும்
 நிமிர்ந்து நில் 
உயர்ந்த நில் 
உயர்ந்து செல் 
கனவு நனவாகும் 
உலகம் உன்னை உணரும்.....1!


ஒவ்வொரு தோல்வியும் 
உன்னை புது வெற்றிக்கு
 தயார் செய்யும் 
கனவுகள் கலைந்து போகலாம்
 ஆனால் 
உன் நம்பிக்கை தளர்ந்து போகவிடாதே நண்பா வெற்றி உனதே
 வெற்றி உனதே ....!


தயக்கம் தடைகளை உருவாக்கும் 
இயக்கம் தடைகளை உடைக்கும்...!!


முயற்சி செய்து கொண்டே இரு 
ஒருநாள் தோற்றுப்போகும்
தோல்வி கூட உன் முயற்சி இடம்...!!

வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil


வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil

இலைகள் உதிர்வதால் 
மரங்கள் வாடுவதில்லை 
ஏனென்றால் அது மீண்டும் 
புதிய இலைகளை தோற்றுவிக்கும் தோல்வி வந்தால் வாடாதே 
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்...!!!


ஒரு வருடம் என்பது
 365 நாட்களை மட்டும்
 கொண்டது அல்ல
 அது நமக்கு 365 வாய்ப்புகளையும் அளிக்கின்றது ...!!


நீ வெற்றி பெற விரும்பினால் 
தடைகளை உடைத்து செல் தன்னம்பிக்கையை விதைத்து செல்....!!


நண்பா நீ அடைய வந்த 
இலக்கை அடைய நினைக்கும் வரை கல் வந்தாலும் சரி 
சொல் வந்தாலும் சரி 
கல்லை காலால் எட்டி  உதை 
சொல் வந்தால் உன் செயலால் எட்டி உதை நீ கலங்காமல் முன்னேறு நண்பா அனைத்திற்கும் பதில் சொல்லும் உன் வெற்றி மட்டுமே....!!


அவமானம் படும்போது
 அவதாரம் எடு 
வீழ்கின்றபோது
விஸ்வரூபம் எடு 
புண்படும் போது
 புன்னகை செய்
 மற்றவர்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு வாழ்க்கையில்
 வாழ்ந்து காட்டு...!!


ஊனம் ஒரு தடையல்ல ஊன்றுகோலாய்
உன் தன்னம்பிக்கை 
இருக்கும்போது...!!!
வாழ்க்கை கவிதை - Positive Life Quotes in Tamil


மரியாதை கிடைத்தால்
 மதித்து நில்
அவமானம் கிடைத்தால்
 மிதித்து நில் 
ஞாயம் கிடைத்தால்
 நிமிர்ந்து நில் 
இலக்கை நோக்கிய பயணத்தில் வீழ்ந்து விடுவோம்
 என்று நினைத்து விடாதே தாங்கி தூக்கி விட ஒரு கரம் ஆவது இருக்கும்....!!


நேரம் சரியில்லை என்பது
 வெறும் பேச்சு 
நேரம் போதவில்லை என்பது 
வெற்றி பேச்சு....!!


நீ உயரும் போது
சில கைகள் உயர்த்தும்
கைகளாகவும் சில கைகள்
தாழ்த்தும் கைகளாகவும் உன் கண்களுக்கு தெரியும் 
ஆனால் இவை பொருட்படுத்தாமல் கனவுகள் மட்டும்
 முக்கியம் என்று நீ செயல்பட்டால் கனவு நிச்சயம் அதன் மூலம் வரும் வெற்றிகளும் நிச்சயம்....!!


புதிய பாதைகளை நோக்கி
 பயணம் செய் சிலரும் 
உன் பாதையை பார்த்து
 அஞ்சுவார்கள் ஆனால் 
நீ மட்டும் அஞ்ச வேண்டாம் ஏனென்றால் இந்த பாதை உனக்கானது உனக்கு மட்டுமே சொந்தமானது மற்றவர்கள்
 உன்னை பார்த்து அஞ்சுவார்கள் அஞ்சமாட்டார்கள் அதற்கெல்லாம் நீ ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது...!


படித்தமைக்கு நன்றி...! 

எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்....


Post a Comment

0 Comments