கணவன் மனைவி கவிதைகள் - husband and wife love kavithai in tamil sms
தாயின் அன்பு
வளரும் காலமே
மனைவியின் அன்பு
நெடுந்தூர பயணமே
மனதில் தொய்வு
என்பதே இல்லை!
வெளியில் முறைப்பதும்
உள்ளுக்குள் அணைப்பதும் கணவனின் உண்மையான
அன்பால் மட்டுமே!
துன்பங்களை தாங்கும்
மனதாகவும்
இன்பங்களை வாரி
கொடுக்கும் இணையாகவும்
கிடைத்த உறவு
மனைவி மட்டுமே!
வயதுகள் நூறு கடந்தாலும் தலைமுடியை நரைத்தாலும் கணவன்-மனைவி பந்தத்தின் முளைத்த அன்பு மட்டும்
வயதுகள் என்பதே இல்லை!
நம்மிடம் எதையும்
எதிர்பார்த்தது இருப்பதில்லை மனைவியின் உறவு
அன்பை மட்டும்
கொடுத்தால் போதும்
தன் வாழ் நாள்
வரையிலும் உன்
வேலைக்காரியாய் இருப்பாள்!
நோயென்று படுத்தால்
உன் வழியாகவும்
துன்பம் என்று வந்தால்
உன் துணையாகவும்
இருக்கும் ஒரே உறவு
உன் மனைவி மட்டுமே!
தந்தையின் அன்பு
போல கணவனின்
அன்பு உண்மையானதும
னைவியின் ஆசைகளை
நிறைவேற்ற துடிப்பது
கணவன் மட்டுமே!
கேட்காமல் கொடுப்பது
தந்தையின் குணம்
எதையும் யோசிக்காமல்
செய்வது கணவனின் மனம்
இவை இரண்டும்
உறவுகளுக்கும் வேறுபாடுகள்
இல்லை!
உன் உடல் கூட
உன்னை விட்டு பிரியலாம்
உன் நிழல் கூட
உன்னை விட்டு விலகலாம்
உன் மனைவியின்
எண்ணங்கள் மட்டுமே
உன்னை விட்டு பிரியாது!
எத்தனையோ பாரங்களை
சுமந்து
அத்தனையும் சுகங்களாக
மாற்றி
தன்னையே தொலைத்து
நிற்பவள் மனைவி மட்டுமே!
மனதில் நினைப்பதை
சொல்ல முடியாமல் தவிப்பது
மௌனம் என்று
எப்படி சொல்வாய்!
கற்பனைக்கு கதவுகள்
திறந்து விட்டு
நிஜத்திற்கு ஜன்னல் கூட
திறக்காத போது நான் பேசி
என்ன ஆகப் போகிறது!
வாயை திறந்தால் கோபம்
வரும் கோபம் வந்தால்
சண்டை வரும் என்று
சமாதானம் வேண்டி
அமைதி காத்தல்
நெஞ்சழுத்தம் என்கிறாய்!
என் சலனத்தை
சஞ்சலப் படுத்திவிட்டு
நான் எடுக்கும் அவகாசத்திற்கு குழப்பம் என்று
பெயர் வைக்கின்றாய்!
என் முயற்சிகளை
எல்லாம் முடிவுகள்
ஆக்கிவிட்டு என்
காத்திருப்புகள் முயலாமை
என்று சொல்கிறாய்!
எனக்கான நேரத்தை
வழங்காமல்
நேரத்திற்கு என்னை
வழங்கி விடுகிறாய்!
உரிமையை தருவதாக
சொல்கிறான்
உன் சுதந்திரத்திற்கு
என்னை தடை என்று
சொல்கிறாய்!
நீ என் உறவுகளை
புரிந்துகொள் என்கிறாய்
ஆனால் நீ என் உணர்வுகளை
புரிந்து கொள்வதே இல்லை!
எங்கு போனாலும்
தனியாக போகாதே என
உன் துணைக்கு இன்றுவரை யாரையாவது அனுப்பி கொண்டே தான் இருக்கிறாய்!
அன்போ அக்கறையோ
உனக்கு வாக்கப்பட்ட
என்னை உன் வாழ்க்கை
துணை என்று வாய் கூசாமல்இ
ந்த ஊரை எப்படித்தான்
சொல்ல வைக்கிறார்!
மஞ்சள் நிறத்தில்
இருப்பதோ மந்திரக்கயிறு
அல்லது
மாட்டுக்கு குத்தப்படும்
மூக்கு கயிறு அல்லது அடிமைத்தனத்தின்
அடையாளச் சின்னம் மோ
அல்ல அது அன்பு கொண்டு
திரி படவேண்டும்
காதல் கொண்டு
முடியபட வேண்டும்
காமம் கலந்து
காதலோடு மார்பின்
இடையில்
என்றும் தொட்டு தொட்டு
நினைவூட்ட வேண்டும்
கணவன் மனைவி
இருவரின் உயர்வு
தாழ்வு கிடையாது
சமம் சமம் சமம்
என்பது மஞ்சள் கயிறு
வாசகமடா!
ஒரு கணவன்
மனைவி இருவருக்கிடையே
முதலும் நீ முடிவும் நீ!
0 Comments