அப்பா பாசம் கவிதைகள் ( appa paasam kavithai in tamil lyrics )
appa paasam kavithai in tamil lyrics |
தாயிற் சிறந்த
கோவிலும் இல்லை
தந்தையில் சிறந்த
மந்திரமில்லை என்ற
சொல்லுக்கு இணங்க இங்கு அப்பாவை மிஞ்ச யாரும் இல்லை!
அம்மாக்கள் எல்லாம்
தங்களின் மகள்களை
திட்டும் போதெல்லாம்
எங்கள் பக்கம் நின்று
பரிந்து பேசுபவர்கள்
நீயேதான் அப்பா!
அனைத்து பெண்
குழந்தைகளுக்கும் அப்பாக்கள் என்றாலே உயிர்
அனைத்து அப்பாக்களுக்கும்
பெண் குழந்தைகள் என்றாலே
உயிர்!
அன்புக்கு இணையான
அடுத்த சொல்
அப்பாக்கள் மட்டுமே
அடிப்பதற்கும்
அக்கறை காட்டுவதற்கும்
ஒரே ஒருவருக்கு மட்டும்
தான் உரிமை உண்டு
ஆராரிராரோ என்று
அம்மாக்கள் மட்டும்
இந்தப் பாடலை பாடுவதில்லை அப்பாக்களும் தங்களின் பெண் குழந்தைகளை தூங்க வைப்பதற்காக அந்தப் பாடல்களைப் பாடி உறங்க வைக்கின்றார்கள்!
பிறப்பு முதல் இறப்பு வரை
எந்தவித எதிர்பார்ப்புமின்றி
தம்மை அன்புடனும்
அக்கறையுடனும்
பார்த்துக் கொள்ளும்
ஒரே உறவு அப்பாக்கள் மட்டுமே!
எதை செய்யவேண்டும்
எதை செய்யக்கூடாது
எப்படி இருக்க வேண்டும்
எப்படி இருக்கக் கூடாது
என்று உரிமையோடு
கூறுவதற்கு அப்பாக்கு
மட்டுமே உரிமை உண்டு
appa paasam kavithai in tamil lyrics |
அப்பா என்பது
ஒரு அதிசயமான புத்தகம்
அது கிடைக்கும் வயதில்
நம்மால் அதை புரிந்துகொள்ள முடிவதில்லை
புரிந்து கொள்ள
நினைக்கும் போது
அது நமக்கு கிடைப்பதில்லை
வலிக்காத மாதிரி அடிச்சிட்டு
தூங்க வைக்கிறது அம்மா
வலிக்கிற மாதிரி அடிச்சுட்டு
தூங்காம தவிக்கிறது அப்பா
அன்பான அம்மாவும்
தோழமையான அப்பாவும்
கிடைத்த குழந்தைகள் யாரும்
தடு மாறியதும் இல்லை
தடம் மாறியதும் இல்லை
அன்பு என்ற வார்த்தைக்கு
ஆயிரம் அர்த்தம் இருப்பினும்
நான் கண்ட முதல் அர்த்தம்
நீதானே அப்பா!
அம்மாவின் உயிரோடு
உயிராய் கருவறையில்
பத்துமாதம் வாழ்ந்த நான்
அப்பாவின் பெயரோடு காலம் முழுவதும் வாழ்கிறேன் !
மென்மையான அம்மாவின்
கரங்கள் நமக்கு மிகவும்
பிடிக்கும் ஆயினும் காய்ந்த அப்பாவின் கரங்கள் எனக்கு
மிகவும் பிடிக்கும் !
இருப்பினும் கண்ணுக்கு
தெரியாத கவசமாய் இருந்து குடும்பத்தை காத்திரே
அப்பா !
அப்பா பாசம் கவிதைகள் ( appa paasam kavithai in tamil lyrics )
உங்கள் தோள் மீது ஏற்றி இவ்வுலகத்தை காட்டினீர்
நீங்கள் பார்த்திராத
வசந்தங்களை எங்களைப்
பார்க்க வைத்தியர் அப்பா
தவறுகள் செய்து
அன்னை என்னை திட்டும் போதெல்லாம் கண்டிக்கும் போதெல்லாம்
எங்கள் பக்கம் நின்று
பரிந்து பேசுவது
நீங்கள்தானே அப்பா!
இவள் என் மகள்
இவளை திட்ட கூடாது என்று பாசத்துடன் அனைத்தது
நீங்கள் தானே அப்பா !
சிறிய சாதனைகள் படைத்தாலும்
என் மகள் என்று பெருமை கொள்கிறேன் அப்பா விட்டுக்கொடுத்ததில்லை தட்டிக் கொடுத்து எங்களை காக்கும் தெய்வம் நீங்கள்தானே அப்பா!
மீண்டும் வயது சுருங்கி
பூமி பின்னே சுழற்றி
ஒருமுறை குட்டிச் சுவற்றில்
உட்கார்ந்து குடும்பம் நடத்த
ஆசைதான் எல்லா அறுவது வயது அப்பாக்களுக்கு மே !!
அனைத்து அப்பாக்களும்
பெண் குழந்தைகளுக்கான அற்புதமான ஒரு பரிசு
அதை ஒரு சில உறவுகள்
புரிந்து கொள்வதில்லை
ஆணழகன் அப்பாவிற்கு
அழ தெரியாது
குடும்பத்திற்கு மாறாக
உழைத்த போதும்
பிள்ளைகளின் பசியாற்ற
ஓடாய் தேய்ந்த போதும்
என்னடா வாழ்கை என்று
ஒருபோதும் அறிந்திருக்க
மாட்டார்
மனைவியை நெஞ்சில் சுமந்து குழந்தைகளை தோளில் சுமந்து குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து வழி தெரியாமல் நடுத்தெருவில் நின்ற போதும்
என்றும் அவர் குடும்பத்தை கைவிடவில்லை!
appa paasam kavithai in tamil lyrics |
பிறந்ததிலிருந்து
இந்த உலகை தனது
சுட்டு விரல் வழியாக
அறிமுகம் செய்வது
அப்பாக்களின் வேலை
தீதும் நன்று கற்றுத்தரும் அப்பாக்களை பெண்
குழந்தைகளுக்கு வாழவும்
கற்றுத் தருகின்றனர் !
அப்பா கிட்ட காசு இல்லாம
என்னும் சொல் கேட்டு
அழகாக தலையாட்டும்
மகளின் புரிதல் தந்தைக்கு சோகமானது தான்!
படித்தமைக்கு நன்றி...!
எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்.
0 Comments