Trending

6/recent/ticker-posts

காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics

***காதல் கவிதைகள்***

`தமிழ் காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics

தமிழ் காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics

திட்டிவிடும் பாம்பைப் போல்
 எட்டி நின்று பார்த்தவளே 
உயிரை மட்டும் விட்டுவிட்டு உணர்வைக் கொண்டு தீர்த்தவளே ...!!


குமரி ஞாழல் நீ சூடி
 குமரிக்கடல் ஓரம்போ 
முக்கடலும் மோதிக்கொண்டு பேரலையை பின்னால் வரும்...!!


உப்பு காத்து பட்டு பட்டு
 உடைந்து வாழும் பாறை போல 
உன் மூச்சு காத்து பட்டு 
உடையாதா என் தேகம்...!!


 பசித்த தேகத்தோடு பரிதவிக்கும் தேரை போல 
பாவிப்பய ஆசைக்கு பணியாத
 உன் தேகம்...!!


 கடல் அலையின் வேகத்தில் கரைந்துபோகும்
 கற்சிலையே கண்ணழகி 
மோகத்துல எண்ணமெல்லாம் வருடு தடி...!!


சித்திரம் பேசுதடி 
உன் சிரிப்பின் ஓசையை கண்டு சின்னத்திரையும் தேடுதடி
 உன் சிலை அழகை வடிவமைக்க ...!!!


என்றென்றும் தேடினேன்
 உன் பொன் முகத்தை 
எங்கே தேடி காண்பேன்
 உன் சிரிப்பு முகத்தை...!!!


கண் ஜாடை காட்டி
 என் மனதை ஈர்த்தவளே
உன் கண்கள் என்ன
 காந்தமோ ...!!


முத்துக் குளித்து 
சிற்பி கொண்டு வந்தேன் 
ஆனால்...
உன் முகத்தில் விழுந்த
 என் சிரிப்பை கொண்டு வர முடியவில்லை...!!


கடல் நீரை கொடுத்தாலும்
 குடித்து விடுவேன்
பெண்ணே...
 உன் கண்ணீரை மட்டும்
 என்றும் சிந்தி விடாதே...!! 

`தமிழ் காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics



ஆடி போனா ஆவணி வரும்
ஆனால் ....
நான் உன்னை தேடி வந்தாள்
 என் மேல் உனக்கு காதல் வருமா...!!


திங்கள் போன்று
 ஒளி வீசும் திரு முகம்
 கொண்டவளே நீ நிலவு என்று
 நான் நினைக்கிறேன் ...!!


அலர் போல் 
மலர் முகம் கொண்டவளே 
நீ மலர்களின் ராணி என்று
 நான் நினைக்கிறேன் ...!!!


மேரு போல உயரத்தில் 
நின்றவளே 
நீ இமயமலை மூச்சு என்று 
நான் நினைக்கிறேன்...!!


சித்தம் என்ற சொல்லுக்கு
 சீர்தூக்கி நின்றவளே என்றும்
 நான் உன்னிடம் சத்தமின்றி
 நடப்பேன் ...!!


சித்திரம் பேசுதடி
 நீ சீர்தூக்கி நின்றாள்
சாஸ்திரத்திற்கும் வழியுண்டோ ஆனால்
சாதிக்கு மட்டும் வழி இல்லையே......!!!!


வான்புகழ் கொண்ட
 வள்ளுவனே
 வானம் கூட உன்னை பார்த்து வணங்குமடா  எத்திசையிலும் 
உன் புகழ் பரவுமடா ...!!!

`தமிழ் காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics

தமிழ் காதல் கவிதை-Love Quotes in Tamil Lyrics

வானவில் போன்று 
உன்னுடைய குரல் ஒளி
 உலகமெங்கும் ஒழித்திட
வண்ணத்துப் பூச்சி போல் 
உன் புகழ் எங்கும் பரவிட...!!1!


எட்டாத நிலவுக்கு 
உன் சிரிப்புதான்
 கண்ணழகு
 தொட்டாசினிங்கி
 உன் தோள் மேல் 
வெட்கம் அழகு...!!!


 தேன் சிட்டு குரலுக்கு 
உன் வெட்க சிரிப்பு அழகு 
தொகை மயிலுக்கு 
உன்கையில் தொடும் கூந்தல் அழகு அழகிற்கு அழகு கூட்ட உன் அழகிற்குக்ஏற்ப நான் 
கவிதை எழுத கற்றுக் கொண்டேன்...!!


ஏனோ என் மனம்ஏற்கவில்லை காதலியாய் 
இதுவரை நான் உன்னிடம் இல்லை தோழனாய்
 எள்ளளவும் காமம் இல்லை
 என் மனமோ
 திரிசங்கு  சொர்க்கமாய் 
வான் வருவான் வருவான் என காத்திருக்கும் இரவுக்காக
 என் மன தோன்றலே கிறுக்கல்கள்....!!1


மலர்கொண்டு 
மலர் இணையும் 
மகரந்த சோலையில் 
மாயவன் மனம் மயங்குகிறான் மின்மினிப் பூச்சியைப் போல ...!!


கண்கள் மயங்கி மடிந்த
என் மனமும் அவளைக் கண்டு அசைந்தது 
அவளின் வருகையால்...!!


வெண்ணிற ஆடையால்
 இரவு முழுவதும் குளிரவைத்து புரியாத புதிர் போல
 பகலில் மறைந்து செல்லும் 
இரவு தேவதையே
உந்தன் மாயமென்ன
 வெண்ணிலவே....!!!!


அலையடித்து அலையடித்து கரைத்துவிடும் பாறை போல 
என் பார்வை உன் நெஞ்சை 
கரைத்து விடாதா 
எதிர் நீச்சல் போட்டியிடவே 
எகிரி குதித்த தேரை  போல 
எதிரிகளை ஏணியாக்கி
 ஏற்றம் பல காண்போமே...!!


கத்திச் சண்டை கற்று விட்டேன்
 உன் வாழ்வீசும் விழியிலே
 காதல் ஞானம் பெற்று விட்டேன் 
உன் உலகம் சொல்லும் வழியிலே ....!!


ஒருமுறை தீட்டுகிறாள் உன் புருவத்தால் 
யாரை கொள்ளவோ பையன் தமிழச்சி திமிரழகி 
உன்னை பார்க்க என் மனம் இழுக்குதடி...!!


 உன்னை திருடும் என் பார்வை பட்டு வலிக்குதடி 
பணங்கல்லின் மயக்கம் 
போதை பார்வையில் உண்பேனடி
இனி இல்லை தயக்கம் 
நாம் காதல் குடுவைக்குள் செல்வோம் அடி....1!


மாலை நேர மயக்கத்தில் 
உன் மைவிழி என்னை மயக்கியது நான் என்னவென்று சொல்ல 
என் மயக்கத்தின் காரணத்தை...!!


கருணையுள்ளம் கொண்ட உன் மனதிற்கு
நீல் நிலம் போல் உன் புகழினை 
நான் எங்கு சென்று பா....!!


மாரி போன்று பொழிந்து 
என் மனந்தை குளிர்தவளே
 உன்  புகழை நான் முற்றிலும்
 எங்கு சென்று கூறுவேன்...!!


படித்தமைக்கு நன்றி...! 

எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்.

Post a Comment

0 Comments