அம்மா கவிதைகள் - amma pasam kavithai in tamil
amma pasam kavithai in tamil |
ஒவ்வொரு உயிருக்கும்
என்றும் ஒரு உன்னதமான
உறவு அம்மா!
அம்மா
என்னை பத்து மாதம்
சுமந்து பெற்றெடுத்தவள்
நீதானே அம்மா!
உனது தொப்புள் கொடியில்
எனக்கான உணவை
அளித்தவள்
நீதானே அம்மா!
கல்லும்?
முள்ளும் ?
குத்தாமல் இருக்க
எனக்கு காலணி வாங்கிதந்து
என் காலுக்கு அழகு சேர்த்தவர்
நீயே தான் அம்மா!
உன் அன்பும்
பாசமும் பற்றி
நான் எங்கு சென்று பாடுவேன்
அம்மா
சொல்ல வார்த்தைகள் இல்லை!
தன் மகன்களையும்
மகள்களையும் பற்றி
கவலைப்படும் ஒரே உயிர்
அம்மாக்கள் மட்டுமே!
உனக்கு
எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எங்களின் மீது திணிக்காமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாயே அம்மா!
amma pasam kavithai in tamil |
உன் புகழை
நான்
எங்கு சென்று பாடுவேன்
அம்மா!
உனக்கு எவ்வளவு
துயரம் வந்தாலும்
என்னை சீர்தூக்கி சென்றாயே
அம்மா!
என்னைத்
திட்டினாலும்
அடித்தாலும்
கண்டித்தாலும்
அனைத்தாலும் என்றும்
என்னுடைய பாதுகாப்பு கவசம் நீயேதான் அம்மா!
நீ பச்சைத் தண்ணீரைக்
குடித்தாலும் எங்களுக்கு
பாலூட்டி சோறூட்டி உழைப்பின் கஷ்டத்தை தங்களிடம்
திணிக்காதே ஒரே உயிர்
அம்மாக்கள் மட்டுமே!
தாயில் சிறந்த கோவிலும்
இல்லை
உன்னை விட சிறந்த பாசமும்
இல்லை!
முடியாத பாசம்
உனக்காக அழும் விழிகள்
நீ மட்டும் சாய்ந்து கொள்ள
ஒரு தோள்
உன்னை பசிக்காமல்
பார்த்துக் கொள்ளும்
தேவதை
அவர்கள் அம்மாக்கள் மட்டுமே!
நான் நேசித்த முதல்
பெண்ணும்
என்னை நேசித்த முதல்
பெண்ணும் நீதானே
அம்மா !
கல்லறையில் உறங்கச் சொன்னாலும் தயங்காமல் உறங்குவேன்
அம்மா ?!
நீ தாலாட்டு பாடினாள்
என் மூச்சு உள்ளவரை
காப்பேன் அம்மா !
உன்னை பற்றி
படிக்கும் போதெல்லாம் தவறாமல் வருகிறது அம்மாவின் முகம்!
உலகில் தேடி தேடி
அலைந்தாலும் அமர முடியாத
ஒரே சிம்மாசனம்
அம்மாவின் கருவறை தான்!
வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா !
வாழ்க்கையை தியாகம் செய்பவர்கள் அம்மா!
என்றும் உன்னத மாணவர்கள்தான்!
நான் எப்போதெல்லாம்
தவறு செய்து
வழி மாறியபோது
என் தவறை திருத்தி
எனக்கு வழித்துணையாக
வந்தவள் நீயே அம்மா!
அல்லும் பகலும்
பாராமல் அவர்களின்
தூக்கத்தை தொலைத்து விட்டு தன்னை தூங்க வைத்த
ஒரே உயிர் அம்மா
அம்மா மட்டும்தான்!
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
அம்மா உன் முத்தத்திற்கு
ஈடு இணை
ஆயிரம் பொற்காசுகள்
கொடுத்தாலும் ஈடாகாது
அன்பு பாசம்
என்ற சொல்லிற்கு
அம்மாக்கள் மட்டும்தான்
என்றும் ஈடு இணையாக
இருக்க முடியும்!
தன்னை மறந்து
எங்களின் நலனை
மட்டுமே
மனதில் கொண்டு
மலர் தூக்கி சென்றாய்
அம்மா!
சோறூட்ட அம்மா
பாலூட்ட அம்மா
பாதுகாப்பவள் அம்மா
தலை துவட்ட அம்மா
தலையணையாய் இருப்பவளும் அம்மா அம்மா அம்மா!
அம்மா என்ற சொல்லுக்கு
வேறு எந்த மந்திரமும் இல்லை
அம்மா!
amma pasam kavithai in tamil |
தாய் என்று சொன்னவுடன்
முதலில் எனக்கு நினைவில்
வருவது அற்பணிப்பு தான்
எனக்கென உன் வாழ்வை அர்ப்பணித்தாயே உனக்கு
என் ஆசை கவிதைகள் அம்மா!
உன்னை பற்றி வர்ணிக்க தெரியவில்லை எனக்கு
நான் என்ன தவறு செய்தாலும்
என் மேல் அன்பு காட்டாமல்
இருக்க தெரியவில்லை உனக்கு
என் கோபத்தை உன்மேல் காட்டாமல் இருக்க தெரியவில்லை எனக்கு
நான் என்னதான் கோவப்பட்டாலும் என்ன ஆச்சும்மா என்று
கேட்காமல் இருக்க தெரியவில்லை உனக்கு
மன்னிப்பு கேட்க தெரியவில்லை எனக்கு
கரிசல் காட்டாமல் இருக்க தெரியவில்லை உனக்கு
சாப்டியா மா என்று கேட்க தெரியவில்லை எனக்கு!
இன்னும் கொஞ்சம் போட்டு கோமா என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை உனக்கு
உன் வழியை பகிர்ந்து கொள்ள தெரியவில்லை எனக்கு
எனக்கு அடிபட்டால் பதறாமல்
இருக்க முடியவில்லை உனக்கு!
அம்மா பற்றிய கவிதை வரிகள் - (amma pasam kavithai in tamil)
என் வாழ்க்கையை விட்டுவிட்டு உன் வாழ்க்கையை திரும்ப பார்க்க தெரியவில்லை எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக் கொண்டே உன் வாழ்க்கையை காக்க தெரியவில்லை உனக்கு
பத்து மாதம் வலி தெரியவில்லை எனக்கு
அந்த பத்து மாத வலியை சொல்ல தெரியவில்லை உனக்கு இவையெல்லாம் தவறு என்று தெரிந்த உடன் மன்னிப்பு கேட்க ஓடோடி வருகிறேன் உனக்கு
அப்போது ஆசை முத்தம் தருகிறாய் எனக்கு!
மொழி தெரியாத எனக்கு
என் மழலை நாவில் வந்த
முதல் வார்த்தை அம்மா
முகம் தெரியாமல் என்னை
நேசித்த ஒரே உயிர் அம்மா
உலகில் உயிருள்ள ஒரே ஓவியம் அம்மா!
படித்தமைக்கு நன்றி...!
எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்.
2 Comments
இப்போதான் படிச்சு முடிச்சன். அற்புதமான பதிவு👍
ReplyDeleteTq
Delete