friendship kavithai in tamil |
நண்பன் நட்பு கவிதைகள் - friendship kavithai in tamil
எல்லா பேருந்து
ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒரு நண்பன் வந்து
ஊருக்கு அனுப்பி அடையாளம்.!
பள்ளிக்கூடத்தின் கடைசி பெஞ்சு மகான மாணவர்களையும்
திக்கான நண்பர்களாகவே
மாற்றுகிறது.!
அசோக மரங்களின்
நிழல் அடியில் கிடக்கிறது நண்பா நமது மூன்று வருடப் புன்னகை .!
கல்லூரி தேவதைகள்
தவம் செய்யாமல் தரும்
வரம் தான் நட்பு .!
நண்பர்களே
எங்கே இருக்கிறீர்கள்
சாய்ந்து கொள்ள தோள் தந்தவர்களே இப்போது
அழ வேண்டும் போல் இருக்கிறது கொஞ்சம் மடி தாருங்கள்.!
அடுத்தவன் எச்சில் என்று
அருவருப்பு வருவதில்லை
நண்பர்கள் சேர்ந்து
தேநீர் குடிக்கும் போது மட்டும்.?
டேய் என்று
இன்னொரு முறை கூப்பிடு
என் மரியாதைகூடட்டும்.!
பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது காதல் .!
ராஜ களை உருவாக்குகிறது
நட்பு .!
விற்பனையாகாத கதைகளை சுமக்கும் ஒவ்வொருவனுக்கும்
நண்பன் தான் முதல் கடை.!
பேருந்து படியில்
தூங்கி வருவதற்கு காரணம்
விழமாட்டோம் என்ற தைரியம் இல்லை வில நண்பன்
விடமாட்டான் என்ற நம்பிக்கை தான்.(
முதல் மேடையேறி
ஆடியும் ? பாடியும் ?
பேசியும் ? வருபவனுக்கு
நண்பன் தான் தருவான் முதல் விருது கலக்கிட்டடா மாப்பிள்ளை என்று சொல்லி.!
friendship kavithai in tamil |
பட்டப்பெயர் சூட்டி கொள்வோம் பட்டமளிப்பு விழா இல்லாமல்
தரப்படும்
பட்டங்கள் அல்லவா அவை.(
நண்பா நீ என்மீது விழுந்த
பட்டாம்பூச்சி அல்ல
பருத்தி விதை.!
சட்டையை
மாற்றி போட்டு
கல்லூரிக்கு வந்தநாட்கள்
திரும்ப வருமா தோழா .!
சிகரெட்டை ஆளுக்கு ஒரு வாய் சிறுகச்சிறுக இழுத்து
நடந்த நாட்கள்
வருமா தோழா .!
விடுதியில் காய்ச்சல் வந்தால்
விஸ்கி மருந்து
குடித்த நாட்கள் மீண்டும்
வருமா தோழா.!
நண்பன் தங்கை திருமணத்திற்கு நடந்து நடந்து
தேய்ந்த நாட்கள்
திரும்ப வருமா தோழா.!
ஒவ்வொரு முறை
ஊருக்கு புறப்படும் போதும்
உள்ளே உடைத்து ஊற்றிய சந்தோஷம் கடைசி நாளில் இல்லையே .!
வெளியே ஒன்றாய் நின்று புகைப்படத்தில் சிரித்தோம்
ஆனால் உள்ளே உருகி விழுந்து சொல்ல முடியாமல் தவித்தோம்.!
friendship kavithai in tamil |
மீண்டும் சந்திப்போம் என்ற விடைபெறும் வார்த்தையில்
யாருக்கும் இருப்பதில்லை முழுமையான நம்பிக்கை.?
இருந்தாலும்
அதை சொல்லி பிரிவதை தவிர
வேறு வழி இருக்கிறது நட்பில்.?
எந்த திரையரங்குகளில்
இருக்கும் நண்பா
நம் விசில் சத்தமும்
அதிரடி விமர்சனங்களும்.!
அவளருகில் அமர்ந்து
சுற்றுலா செல்ல
எனக்காக நீ
இடம் பிடித்திருந்தபோது தெரிந்தது
நீ வெறும் நேய நல்ல
ஆஞ்ச-நேயன்.!
ஒரு தேநீர் கோப்பை
ஆறு உதடுகள்
நட்பின் ருசி .!
ஒரு தலையணை
மூன்று உறக்கங்கள்
நட்பின் கனவு .(
ஒரு வாகனம்
எட்டு சிறகுகள்
நட்பின் பயணம்.!
நண்பனாய் இருப்பதை விட
என்ன தகுதி வேண்டும்
மனிதனாய் வாழ .!
என் நண்பனால்
எனக்கு எதிரியாக முடியாது
என் எதிரிகள் கூட
என்றாவது ஒருநாள்
என் நண்பனாக முடியும்
இது தான் நட்பின் சக்தி .!
மீண்டும் வயது சுருங்கி
பூமி பின்னே சுழற்றி
ஒரே ஒரு முறை
குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து
குடும்பம் நடத்த ஆசைதான்
எல்லா 60 வயது அப்பாக்களுக்குமே.!
உலகில் நண்பனே இல்லாத
ஒரு மனிதன் உருவாகும் போது
உலகம் முடிந்து போயிருக்கும்.+
முதுமையில் தெரியும்
நட்பின் முதிர்ச்சி
முதியவர்களின் கண்ணீர்
சுரப்பியின் விளையாட்டல்ல அனுபவத்தின் பிரிவு .!
எந்த கடற்கரையில் இல்லை
வெள்ளை நரை முடியுடன்
வாக்கிங் நண்பர்கள் .!
எந்த மார்க்கெட்டில் இல்லை
அன்றாடம் காய்கறி வாங்கும் அம்மாக்களின் தோழிகள்.!
ஆகாயம் நட்பாய்
கை நீட்டினால்
பூமியை தூக்கி
பூ சென்டாய் நீட்டலாம்.!
பேருந்து நிறுத்தங்களில் கொட்டிக்கிடக்கும்
மாலைநேர கூந்தல் பூக்கள் போல்
நம் வாழ்வின் எல்லா பதிவுகளிலும் சிந்திக்க கிடைக்கிறது
நட்பின் மலர்கள்.!
மானுடத்தின்
முதல் கவிதை
அன்பு .!
இரண்டாவது கவிதை
நட்பு .!
குறைந்தபட்ச உண்மை
காதல் ஆகி விடுகிறது
அதிகபட்ச உண்மை
நட்பாகி விடுகிறது.!
நேசிப்பதை
கோபிப்பதை விட
என்ன தெரியும்
என் நண்பனுக்கு
இரண்டிலும் இருக்குமே
ஒருவித அக்கறை.!
உலகில்
600 கோடி மனிதர்களும்
நண்பர்களாய் இருந்து விட்டால்
அணு ஆயுத ஒப்பந்தத்தில்
ஆகிவிடும் கையொப்பம்
எப்போதுவரும் அந்த சந்தர்ப்பம்.!
உற்ற தோழனும்
உயிர் தோழியும்
உருவாகவே முடியாதா
நண்பர்களாக மட்டுமே.!
தோழிகளும் நண்பர்களும்
ஒன்றாய் சிரித்த
மொட்டை மாடி தான்
உலகெங்கும் நானறிந்த
ராஜகோபுரங்கள்
நண்பர்களாக மட்டுமே.!
நட்பு
ஒரு மனிதர் தேவை மாத்திரமல்ல உலகின் மொத்த
அணு ஆயுதங்களையும்
கட்டிப் போட்டு கொண்டு இருக்கும் ஒரே மந்திரம் நட்பு தான்.!
நட்பு கூட ஒரு வகையில்
கடவுளின் அறிமுகம் மாதிரியே அவ்வளவு சீக்கிரத்தில் அவை அகப்படுவதில்லை..!
தோழிகள்
எதிர்பார்ப்பதில்லை
எப்படி தன்னை நண்பன்
வியக்க வைப்பார் என்று .!
ஏனென்றால்
நட்பில் மட்டுமே
எதிர்பார்ப்பு இல்லை .!
ஓராயிரம் உறவுகள்
நம்மோடு வீசும்
ஒரு நண்பனின் வார்த்தைதான் இதயத்தோடு பேசும் .!
நட்பு கவிதைகள் - friendship kavithai in tamil :
கோயிலை விட புனிதமானது
நண்பன் பெயருக்காக
அர்ச்சனை செய்யும்
நண்பன் மனம் .!
நட்பு -வாழ்வை
ஓவியம் ஆக்குகிறது
நட்பு- காலண்டரில்
பூவாய்கிறது.!
படித்தமைக்கு நன்றி...!
எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்.
0 Comments