Trending

6/recent/ticker-posts

தமிழ் மொழி சிறப்பு கவிதைகள்

 தமிழ் மொழி கவிதைகள்

தமிழ் மொழி சிறப்பு கவிதைகள்

தொன்று தொட்டு தொடங்கும் 

தமிழ் மொழி இப்பொழுது 

தொங்கிக் கொண்டிருக்கும் 

பழுத்த மாம்பழம் போல

 கீழே விழுந்தால் சிதறிப்போகும்

 நம் மனிதமும் பதறிப் போகும்..!


வெட்கமே இல்லை இந்த 

மானங்கெட்ட மனதிற்கு 

வெள்ளையன் மொழியை ருசி அரிய நாவை துடிக்க எங்கே தோன்றியது..!


இந்த தாய்மொழி நீ கைவிரித்து உதறிய அனாதை இல்லத்தில் புரிகிறதா தாய் தந்தை இல்லாமல் தாய்மொழிகள் இல்லை..!


 வெள்ளை என் பிஞ்சு கூட விம்மி அழும் பொழுது அம்மா என்கிறதே உலகளாவிய மொழியை ஒரு

 வரியில் புதைப்பதா..!

தமிழ் மொழி சிறப்பு கவிதைகள்


தமிழ் பாடிய தலைவர்கள்

 இன்று இருந்திருந்தால் 

தலை குனிந்து இருப்பார்கள்

 காலம் பதில் சொல்லும் 

காலம் அதில் வெல்லும் ..!


தாய்மொழியாம் நம் உயிர் மொழி இன்று உயிரற்று உறங்குகிறது வந்தவன் விட்டுச் சென்றான் இலையில் மிஞ்சிய பருக்கைகளை வளர்ந்தவன் அள்ளிச் சென்றான் அதை கழுவி உண்ண தமிழை. .!


தவணைக்கு விடுகிறோம் 

ஆங்கிலம் என்ற பணம் 

நம்மிடம் அதிகம் பறப்பதால் புரிந்துகொள் புதிய தலைமுறையை..!

தமிழ் மொழி சிறப்பு கவிதைகள்


தாய்மொழி தமிழ் என்று 

நெல் விளையும் பூமியில் 

என் தமிழ் சொல் விளைந்த 

காலம் அறிவீறா.. !


பாமரன் படிப்பறிவும் காலம் அது மூவேந்தர் ஆண்ட காலம் அது

 மொழி அன்று இல்லை

 என்றே மொழி இலக்கணம் கொண்டது எவ்வாறு தொல்லியல் கண்டு சொல்லும் இவ்வுலகம்..!


 என் தொல்காப்பியம் கண்ட இலக்கணம் சொல்லுமோ என் கணிதம் காணாத எண்களும் என் தமிழ் கணிதம் கனடா அணுவைக் கொண்டு அறிவியல் காணும் இவ்வுலகம் அனுவை துளைத்த என் அவ்வையின் அறிவு காணுமோ ..!


கீழடியில் புதைந்த என் நாகரீகம் காண்பீர் சீரடியில் உலகம் அழிவை புதைத்த என் தமிழ் பழமையும் ஒருநாள் காண்பீர்..!


மொழிகளில் மூன்று எழுத்து இலக்கணம் என் தமிழ் மொழிகள் புவியில் பிறந்தும் எத்திசையிலும் காற்றென நீரென உணர்வின் ஒளியாய் வடிவாய் வாழ்வது உயிர் தமிழ் மொழி அல்லவா !

தமிழ் மொழி சிறப்பு கவிதைகள்


ஐந்திலக்கணமும் அறநூல்களும் இணைந்து பெற்ற மொழி தமிழே பரந்து விரிந்த உலகில் ஆழ்ந்து அகன்று தேடியும் கிடைக்குமோ திருக்குறளும் ஆத்திசூடியும் மொழியின் துணையின்றி தனித்தியங்கும் ஆற்றலை பெற்றதும் நம் தாய் தமிழ் மொழி!


 தொன்மை மொழிகள் என இசைபாடும் லத்தீன் ,கிரேக்கம் எபிரேயம் ,சமஸ்கிருதம் ஏட்டளவில் வாழும்போது உயிர்ப்போடு

 முக்காலம் வென்றதும் நம் 

செந்தமிழ் !


பாரதம் மறந்து பிற நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இந்திய மொழிகளில் வேரூன்றி அழைத்ததும் தமிழ் மொழி ஒன்றே யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றுரைத்து!


 செந்தமிழ் நாடு என போற்றினான் பாரதி யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா வெய்ய உலக வாழ்க்கைக்கு மனிதம் சேர்த்ததும்!


 தமிழ் மொழி எழுத்துக்களை பாறைகள் பானைகள் ஓலைகள் காகிதம் முதல் நிகழ்கால இணையம் வரை நம்மை பேதம் மறந்து இணைப்பதும் அமுதாக்கிய தமிழ் நம் மொழி அறிவோம் கதை கவிதை எழுதுவோம் வரும் தலைமுறையும் போற்றி காக்குமே!


கல்வி கவிதைகள் (Kalvi kavithai in tamil)

Kalvi kavithai in tamil


கண்ணை மூடி.! 

கனிவுடன் நீ படித்தால்.!

 கற்பனையில் எண்ணியபடி.! 

உன் வாழ்க்கை.!


விருப்பம் பல கொண்டு.!

விரைவுடன் நீ படித்தால்.!

வினோதமான.!

நன்மைகள் கொண்டது.!

உன் வாழ்க்கை!


ஏடுகள் பலவற்றை.! 

நீ புரட்டினால்.!

ஏற்றுக்கொண்டது.!

உன் வாழ்க்கை!


சிறப்பாக நீ படித்தால்.! 

சிந்தனைகள் நிறைந்தது.! 

உன் வாழ்க்கை !


காரணம் பலவற்றை.! 

ஆராய்ந்து கருத்துடன்.!

 நீ படித்தால் காத்திருக்கத் தேவையில்லை.! 

உன் பணிக்காக!

Kalvi kavithai in tamil



இமை மூடி.! 

நீ படித்தாள்.!

இன்பம் காத்திருக்கும்.! 

உன் வாழ்வில்!


கல்வி என்னும்.! 

கற்கண்டு உன்.!

வாழ்வை கற்பக.! 

விருட்சம் போல்.! 

வளரச்செய்யும்!

Kalvi kavithai in tamil


கண் போன்ற கல்வியை .!

நீ பொன் போல் பாதுகாத்தால் மண்ணுலகில் சான்றோர்கள் 

வாழ்ந்து விண்ணை தொடலாம்!


எழுத்தாளர் :

Keerthana .R


Post a Comment

0 Comments