Trending

6/recent/ticker-posts

தனிமை கவிதை - Thanimai Kavithai In Tamil


தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil

 தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil

கனவுகளைப் புதைத்து விட்டு கல்லறைத் தோட்டம்
வழியே நடைபிணத்தின் 
சிறு உருவமாய் நடமாடுகிற 
நான் தனிமையில்....!


நிறைவேறாத ஆசைகளின் நீண்டதொரு
 பட்டியல் கவலை சேகரிக்கும்!
இதயத்தில் கசங்கி கிடக்கும் இதயம் 
இதுவே என் தனிமையின்  நிலையம்...!


நடக்கும் பாதைகளின் 
நாளை பூக்கள் கிடைக்கும்
 என இன்று கிழிக்கும் முட்கள் 
மேல் ரத்தம் சொட்ட நடக்கின்றேன் நான் தனிமையில்...!


தாலாட்டும் சோகமும் 
தலைகோதும் தனிமையும்
இமைகளின் வாசல் வழியே 
இரவெல்லாம் வழிகிறது....!


எதிர்பார்த்து கிடைக்காத 
அன்பும் ஏமாறி உடைந்த 
நெஞ்சமும் வழித்தரும்
பெரும் அமைதியாய் 
வாழ்வோடு நீள்கிறது 
தனிமையின் நிலைமை....!


முடித்துவிடலாம் என நினைக்கும் முடிவுரை என் வாழ்க்கையை 
மீண்டும் வாழ சொல்லி
 என்னை விட்டுச் செல்கிறது
 தனிமை!
என் ஏதோ ஒரு நம்பிக்கை இல்லை யாரோ ஒருவரின் வேண்டுதல்...!


நெடுந்தூர வாழ்க்கையை 
பயணித்தல் சின்ன 
தெளிவைத் தந்தது என் 
தனிமை உலகம் தான்....!


ஆழமான பல சிந்தனைகளையும் 
அழுத்தமான பல முடிவுகளையும் 
எடுக்க மன உறுதியை வளர்த்தெடுத்தது 
என் தனிமை உலகம்...!


எல்லா மனிதர்களுக்கும் 
தனிமை படிக்கும் 
வாய்ப்பு அமைந்து விடாது 
இந்த உலகத்தை 
உற்றுநோக்கும் பவருக்கு 
மட்டுமே கிட்டும் 
இந்த தனிமை உலகம் 
அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது...!
தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil
என் தனிமை உலகத்தில் 
போட்டி போட யாரும் இருக்கமாட்டார்கள்
என் வெற்றியை 
பறிக்கை யாரும் 
இருக்க மாட்டார்கள் 
ஏனென்றால் என் வாழ்க்கை
தரத்தை யாரும் தொடமுடியாது உயரத்தில் என்னை பறக்க 
வைத்தது என் 
தனிமை உலகமே.....!


நேற்று கற்ற என் 
வாழ்க்கை அனுபவத்தை 
எல்லாம் திரும்பவும் 
மறுசுழற்சி செய்து 
என்னை சரியான பாதையில்
 என்னை அழைத்தது சென்றது
என் தனிமை உலகம்....!


வெற்றியோ தோல்வியோ 
எதையும் சமாளிக்கும் 
மன உறுதியை தந்தது
 என் தனிமை தான்...!


வெளியே சிரித்து
உள்ளுக்குள் பளித்து 
கண்டுகொள்ள உதவி 
செய்தது என் தனிமை தான்...!


கூட்டத்தோடு கூட்டமாக 
நானும் ஒருவனாக 
சென்று கொண்டு இருந்தேன் 
அப்போது தான் தனிமை உலகம் 
என்னை வழி மறித்தது...!


யாரிடமும் கை கட்டி 
வாய் மூடி அடிமையாக வாழதே எதுவாக இருந்தாலும்
 போராடு போட்டி போட்டுக் 
கொண்டே இரு இது உனக்கான உலகம் என  உணர்த்தியது என் தனிமை உலகம் தான்!
இது அல்ல உன் பாதை என தெளிவுபடுத்தியது என் தனிமை உலகம்!


கருவறையிலிருந்து 
அமைதியான சூழலையும்
 மன உறுதியையும்
 திரும்பவும் மீட்டுத் தந்தது 
என் தனிமை உலகம்...!


பார்க்கின்ற உலகம் யாவும் மென்மையானவை அல்ல 
எல்லாம் பொய்யானவை என உணர்த்தியது என் 
தனிமை உலகம்....!


தேடுவேன் தேடிக்கொண்டே இருப்பேன் என்னை 
முழுமை படுத்திக் கொள்ளும் வரையில் தேடிக்கொண்டே
 இருப்பேன் என உணர்த்தியது 
என் தனிமை உலகம்....!


பொய்யான பொழுதையும் 
புண்ணான பொழுதையும்
 எண்ணி எண்ணி நகைக்கும் புன்னகை பூக்கும் தருணம்...!


ரணங்கள் ராகங்கள் ஆயினும் 
ராகமாய் இசைக்கும் 
ராமிய குரலாய்
 ராவோடு ஓங்கி 
ஒலிக்கும் தருணம்...!!

 தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil

ஆர் உடல் அங்கம் ஆயினும் 
ஆண்டு ஆண்டாய் ரசிக்காது
 ஆக அங்கு அழகு கண்டு
 அசந்து நிற்கும் தருணம்...!!
தனிமை கவிதைகள் - Thanimai Kavithai In Tamil


புண்ணியம் செய்த
 பொழுது எண்ணி 
பூரித்துப் போகும்
 தருணம் 
பாவம் அழிக்க
 பொழுது எண்ணி 
பரிதவிக்கும் தருணம்...!


அரை மணியோ 
ஆயில் வரையும்
 பழகியவன் பாத்திர மறியும்...!!


உடன் இருப்பவன் 
உண்மை முகமும் 
பளிச்சிடும் தருணம் 
தோரணம் முதல் !
தோழமை வரை
 உறக்கம் முதல் !
உழைப்பு வரை 
உன்னைப்பற்றி 
உதறிய செய்யும் !
உத்தமம் வாய்க்கும் தருணம்...!!!


தனிமை கொள்
 கட்டாயம் தனிமை கொள்..!

படித்தமைக்கு நன்றி...! 

எனது பெயர் R.Keerthana, B.SC. எங்கள் இணையதளத்தில் மிகவும் உணர்வு பூர்வமான கவிதைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.. மேலும் இதை பற்றி உங்கள் கருத்துகள் மற்றும் வேறு கவிதைகளுக்கு கிழே கமெண்ட் பாக்ஸ் உள்ள..எழுதி அனுப்புங்க.....நன்றி வணக்கம்.



Post a Comment

0 Comments